நினைவு அஞ்சலி
பிறப்பு
27 1 1933
இறப்பு
13 12 2020
அமரர் பாக்கியம் தர்மலிங்கம்
5ம் ஆண்டு இதய அஞ்சலி
தையல் ஆசிரியை

உரும்பிராயை பிறப்பிடமாகவும் நிம்மதி வீட்டை முன்னைய வதிவிடமாகவும், Ajax, Ontario, Canada வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இளைப்பாறிய தையல் ஆசிரியை திருமதி பாக்கியம் தர்மலிங்கம் அவர்கள் கடந்த ஞாயிறன்று 13-Dec-2020, Ajax, Ontario, Canada வில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையா தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், 

காலஞ்சென்றவர்களான செல்லப்பா - பொன்னம்மா தம்பதிகளின் புதல்வியும்,

காலஞ்சென்ற தவமணி, சிவலிங்கம், சுந்தரலிங்கம் மற்றும் குணலக்ஷ்மி ஆகியோரின் சகோதரியும், 

காலஞ்சென்றவர்களான கந்தையா - மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,

தர்மலோஜினி (பேபி - லண்டன்), சுரேஷ்குமார் (லண்டன்), ரமேஷ் (கனடா), கேதிஸ் (கனடா), கோணேஷ் (லண்டன்), தர்ஷினி (கனடா) , தாரணி (கனடா) ஆகியோரின் அருமைத்தாயாரும், 

கருணாரட்ணம், பத்மாதேவி, லெனி, சசிகலா, வடிவாம்பிகை, மனோகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரதீஷ் - சுரேக்கா, கவிதா, யதுர்ஷினி - ரொம், தனுப்பிரியா, கரோலயின், யுதீஷ், சங்கீஷ், சாருகாஷ், குலனேஷ், குகனேஷ், யுவனேஷ், ஜோடேஷ், சந்தோஷ், லதீஷ், சோபியா, லுவனேஷ் ஆகியோரின் ஆருயிர் பாட்டியும், கற்ரியாவின் அருமைப் பூட்டியுமாவார்.


 

ஈமைக் கிரிகைகள் 20.12.2020  ஞாயிறுக்கிழமை 

கனடா நேரம்  - மதியம் 12:30 முதல் மாலை 2:30 வரை 
பிரித்தானிய நேரம் - மாலை 17:30 முதல் மாலை 1930 வரை
ஐரோப்பிய நேரம் - மாலை 18:30 முதல் மாலை 20:30 வரை
இலங்கை நேரம் -  அதிகாலை 02:00 முதல் அதிகாலை 04:00 வரை

பின்வரும் தொடர்பை அழுத்தி காணொளி ஊடாக பார்வையிடலாம்:
https://video.ibm.com/channel/s5CHH26bSXz

தற்போதைய கனேடிய அரசாங்கத்தின் COVID-19  சுகாதார கட்டுப்பாடுகளுக்கு அமைய குடும்ப அங்கத்தினர் மட்டுமே இந்த எல்லா நிகழ்வுகளில் பங்குபற்ற முடியும் என்பதை மிகவும் மனவருத்தத்துடன் அறியத் தருகின்றோம்.


 


 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கேதீஷ் (கனடா) - மகன்
ரமேஷ் (கனடா) - மகன்
மனோகரன் (கனடா) - மருமகன்
சுரேஷ்குமார் (லண்டன்) - மகன்
கோணேஷ் (லண்டன்) - மகன்
கருணாரட்ணம் (லண்டன்) - மருமகன்
Share with your friends
Tribute 3 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
உரும்பிராயில் பிரபலமாகவும், கௌரவமாகவும், அமைதியாகவும் வாழ்ந்த குடும்பங்களில் ‘நிம்மதி’ வீட்டில் வாழ்ந்த தங்கள் தர்மலிங்கம் பாக்கியம் குடும்பமும் ஒன்று. உரும்பிராய் கற்பகபிள்ளையார் கோவில் எட்டாம் திருவிழாவென்றால் நிம்மதி வீட்டு திருவிழா, பெரிய விமரிசையாக சிகரங்கள், சப்பறங்களுடன், விடிய விடிய பல கூட்டம் மேளங்கள் இசைக் கச்சேரிகள் என்று ஊரே திரண்டு நிற்கும். இவை எல்லாவற்றிற்கும், அந்தக் குடும்பவிருட்சம் ஆல் போல் இன்று தழைத்தோங்கி ஒற்றுமையாக செழித்திருக்க,, ஆணி வேராக இருந்து அரும்பாடுபட்ட ,தையல் பாக்கியம் என்று செல்லமாக அழைக்கப்பட்ட தங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி அம்மாவின் இனிய நினைவுகளுடன் தாங்கள் எல்லாம் அமைதிபெற பிரார்த்திக்கிறோம்.
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள் கோணேஷ். அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். ஓம் சாந்தி ??
Tribute in Light
*கோணேஸ் உன் அன்பு அம்மாவின்ஆத்மா சாந்திபெற எல்லாம் வல்ல இறைவனின் பாதார விந்தங்களைப் பணிவோமாக.ஓம் சாந்தி சாந்தி சாந்தி*?

Summary

View Similar profiles