இலங்கை, யாழ், `கரவெட்டி`யை பிறப்பிடமாகவும் கரவெட்டி, Newzeland, U.K. ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த,
திருமதி புனிதவதி சிவசோதிலிங்கம் அவர்கள்
08-12-2022 வியாழக்கிழமை அன்று இரவு 7:50 அபரபக்க பிரதமை திதியில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற அமரர் பொன்னையா சிவசோதிலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற திரு. திருமதி செல்லையா-வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திரு . திருமதி பொன்னையா-செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நிர்மலன், நிரஞ்சன், நந்தன், சம்பந்தன், ஆரூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்
பபி, கிரிஜா, வாணி, குமுதினி, சயந்தி ஆகியோரின் அன்பு மாமியும்,
பவன், பிரவீன், ராகவி, சுகன்யா, சஞ்சய், தருணி, அனுசன், நேத்ரா, ஹரிசன் ஆகியோரின் அன்புப்பாட்டியும்,
சுந்தரமூர்த்தி, காலஞ்சென்ற விநாயமூர்த்தி, காலஞ்சென்ற கணேசமூர்த்தி, மற்றும் யோகமூர்த்தி, திலகவதி, சத்யமுர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, முருகமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி குடும்பத்தினர் கேட்டுக்கொள்கிறார்கள்.