இலங்கையின் , விடத்தல்தீவை பிறப்பிடமாகவும், தலைமன்னாரை வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் தேவதாஸ் (Deva) அவர்கள் இன்று ( 25.032023) சனிக்கழமை சுகயீனம் காரணமாக காலமானார்.
அன்னார் காலம் சென்றவர்களான திருச்செல்வம் ( முன்னாள் அதிபர் ) மற்றும் பவுலீனம்மா தம்பதியினரின் மகனும்,
யுஸ்ரின் லெம்பேட் ஆசிரியரின் அன்பு கணவனும் ,
ஞானாம்பிகை (பேபி) மரியதாஸ், அமலதாஸ், சுசிலாம்பிகை ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.
இலங்கையில் பிறந்து சுவிற்சர்லாந்து செங்காலன் பகுதியில் வாழ்ந்து ,
இறுதி காலங்களில் இலங்கையில் வாழ்ந்த ,
தேவா
இவ்வுலகை விட்டு மறைந்தார் எனும் துயரச் செய்தியை மிகுந்த வேதனையோடு அறியத் தருகிறோம்.
குழந்தை போராளி, அனோனிமா, அம்பரையா, என் பெயர் விக்ரோரியா, நீண்ட காத்திருப்பு
ஆகிய நூல்களை தமிழுக்கு மொழிபெயர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத் தகவலை உற்றார் , உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
அன்னாரின் நல்லடக்கம் 26.3..2023 ஞாயிற்றுக்கிழமை மாலை தலைமன்னாரில் இடம்பெறும்.