எழுதுமட்டுவாழ் தெற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் முத்தையா இரத்தினசபாபதி அவர்கள் 28.01.2024 ஞாயிற்றுகிழமை காலை 07.15 மணியளவில் இறையடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான முத்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்ற ஆறுமுகம் பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும், புனிதவதி அவர்களின் அருமை கணவரும் துளசீதரன், தாரணி, பரணீதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் ஜெயதர்சனா, வைசாகரன், கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும் புருசோத்தமன், விதுசன், அபினயன், அகத்ததூயன், ஜீவந்திகா ஆகியோரின் நேசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடன் நாகர்கோவில் வீதி, எழுதுமட்டுவாழ் தெற்கிலுள்ள அவரது இல்லத்தில் உற்றார், உறவினர், நண்பர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இறுதி கிரிகைகள் தொடர்பான விபரங்களன பின்னர் அறிவிக்கப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு தயவாக கோருகின்றோம்.