நினைவு அஞ்சலி
பிறப்பு
28 5 1947
இறப்பு
22 2 2026
அமரர் மங்களேஸ்வரி நவரத்தினம்
வண்ணம் அக்கா | Vannammakka Catering

Funeral Live Stream / இறுதிக்கிரிகைகள் நேரலை

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்டருந்த
திருமதி மங்களேஸ்வரி அம்மாள் நவரத்தினம் (வண்ணம் அக்கா) 22.02.2026 ஞாயிற்றுகிழமை மாசி மாத வளர்பிறை சஷ்டி திதியில் இலண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற நவரத்தினம் (அப்பு அண்ணா) அவர்களின் அன்பு மனைவியும்

காலஞ்சென்றவர்களான கிருஸ்ணசாமி மகேஸ்வரி அம்மாள் தம்பதியினரின் அன்பு மகளும்

கனகசபை தெய்வானைக்கண்டு ஆகியோரின் அன்பு மருமகளும்

காலஞ்சென்ற வாசுகி மற்றும் குமரன், தேவகி (தேவா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்

வரதராஜ் (கண்ணன்), பத்மினி, மோகனகுமார் (குமரன்) ஆகியோரின் அன்பு மாமியும்

பாலசுப்ரமணியம், இராயவேல், இலட்சுமிதேவி, ரூபசௌந்தரி அம்மாள்(பெரியகிளி), இராயேஷ்வரி அம்மாள் (சின்னக்கிளி) காலஞ்சென்ற சண்முகானந்தன், காலஞ்சென்ற ஞானேஷ்வரி(பச்சைக்கிளி) மற்றும் புவனேஷ்வரி (குட்டிக்கிளி), அருளானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சபாரத்தினம், மற்றும் பொற்கொடி, மற்றும் காலஞ்சென்ற சறோயினிதேவி, காலஞ்சென்றவர்களான சுந்தரவதனா, கார்மேகசுந்தரம், சாந்தலக்சுமி, கணேசபாக்கியன், தியாகராயா, ஞானதிலகன், விஜயகுமார் மற்றும் நித்தியலக்ஷ்மி, அம்பிகைவதனா ஆகியோரின் மைத்துனியும்

சிறிக்காந், சர்மிளா. சத்தியன், பிரகாஷ், பிரகதீஷ், பிரமிளா ஆகியோரின் பாசமிகு அம்மாச்சியும்,

சுருதி, சக்தி ஆகியோரின் பாசமிகு அப்பாச்சியும்

டிலக்ஷனா, Tobi, சீஷி, தருணி ஆகியோரின் அம்மாச்சியுமாவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்
நன்றி நவிலல்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வரதராஜ் (கண்ணன்) - மருமகன்
குமரன் - மகன்
தேவகி - மகள்
Share with your friends
Tribute 2 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
மாமியின் ஆத்மா இறைவனடி சேர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்... அன்பு மாமியின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்... உங்கள் பாசமும், ஆசீர்வாதமும் என்றும் எங்களுக்கு வழிகாட்டும்... உங்கள் மறக்க முடியாத நினைவுகள் என்றென்றும் நிலைத்திருக்கும்...
Tribute in Light
"வண்ணம் Aunty"யின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகளும், அன்னையின் ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட எங்கள் பிராத்தனைகளும்