OBITUARY
Birth
3 12 1972
Death
16 7 2026
Miss Thiruthika Kailasapathy
Age 53
< Back to profile
Write Tribute
Tribute 8 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
அன்புத் தோழிக்கு கண்ணீர் அஞ்சலி பள்ளி நாட்களின் இனிய நினைவாய் நீ, என் உடன்பிறவா சகோதரியாய் என் மனதில் வாழ்ந்தவள் நீ. பாசம் நிறைந்த தோழியாய் நீ. சிரிப்பால் எங்கள் மனதை மலரச் செய்தாய், இன்று நினைவாக மட்டும் எங்களை விட்டு சென்றாய். உன் பிரிவு ஏற்றுக்கொள்ள முடியாத வலி , உன் பிரிவு தாங்க முடியாத வலி, ஆனால் நீ விட்டுச் சென்ற அன்பான நினைவுகள் என்றும் எங்களுக்கு ஆறுதலாக இருக்கும். இறைவன் உன் ஆன்மாவிற்கு சாந்தி அளிக்கட்டும். உன் குடும்பத்தினருக்கு இந்த பேரிழப்பை தாங்கும் மனவலிமையை அருளட்டும். கண்ணீர் அஞ்சலி, அன்புத் தோழியே.என் உடன்பிறவா சகோதரியே. உன் நினைவுகள் என்றும் எங்கள் இதயங்களில் நிலைத்திருக்கும். இப்படிக்கு உடன்பிறவா சகோதரன் ரகு (இராகுலன்)London
Tribute in Light
அன்பு தோழியே... உடன் பிறக்கவில்லை, ஆனால் ஒன்றாய் வளர்ந்தோம். ஒரே பள்ளியின் பாதையில், ஒரே ஊரின் காற்றை சுவாசித்து, சிரிப்பையும் கனவுகளையும் பகிர்ந்தோம். இன்றோ... வாழ்க்கைப் பயணத்தின் பாதியிலேயே எங்களைத் தனிமையில் விட்டுவிட்டு எங்கே சென்றாய் தோழியே? உன் சிரிப்பின் ஓசை இன்றும் என் காதுகளில் ஒலிக்கிறது; உன் நினைவுகள் என் இதயத்தில் கண்ணீராய் வழிகின்றன. இறைவன் உன்னை தன் அரவணைப்பில் சேர்த்திருந்தாலும், எங்கள் மனங்களில் நீ என்றும் அழியாத நினைவாகவே வாழ்வாய். கண்ணீரோடு உன்னை வழியனுப்புகிறோம்... அன்புத் தோழியே, உன் ஆன்மா இறைவனின் திருவடியில் நித்திய அமைதி பெறட்டும்.

ஆழ்ந்த அனுதாபங்கள் நண்பி திருத்திகா
Tribute in Light
ஆழ்ந்த அனுதாப ங்கள் நண்பி கீத்தா ஓம் சாந்தி
Tribute in Light
Missed you so much my friend rest in peace
Tribute in Light
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகளும், அன்னாரின் ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட எங்கள் பிராத்தனைகளும் !!
Tribute in Light
அமைதியும் சாந்தமும் பொறுமையும் ஒருங்கே பெற்ற தாயுள்ளம் கொண்ட உன்னை எல்லோருக்கும் பிடித்தது போல யமனுக்கும் பிடித்து விட்டது போல. உன் ஆன்மா சாந்தி யடைய பிரார்த்திக்கிறோம்.