Tribute in Light
அறம் பல செய்து,
ஆற்றக்கூடிய சினத்தை ஆற்றி,
இயலுவதுக்கு அப்பாலும் இயன்று,
ஈவதை விலக்காமல் ஊக்குவித்து
உடையது எதுவானாலும் எவருக்கும் விளம்பாமல்,
ஊறுகள் பல கண்டபோதும்
ஊக்கத்தை கைவிடாமல் உழைத்து ,உதவி,
தான்றிந்த எண்ணையும் எழுத்தையும் இகழாமல் இயலுமானவர்களுக்கு எடுத்துயம்பி,
எவரிடமும் இரக்காமால்,
இயன்றளவு ஐயம் இட்டு உண்டு,
ஊரோடு உலகோடு ஒரளவேனும்ஒழுகி,
கற்பிப்பதற்காக
தொடர்ந்து ஒதி
எதிலும் எவரிரும் ஔவியம் பேசாது
தானும் வாழ்ந்து நம்மையும் வாழச்சொல்லி வாழ்ந்து காட்டிய ஒரு ஆத்மா.
நளினி அக்கா
உங்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.