யாழ். உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும் , கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ,
இளைப்பாறிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) திரு.சிவசம்பு தவலிங்கம் அவர்கள் 25.05.2021 செவ்வாய்க் கிழமையன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற
பொன்னையா சிவசம்பு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வனும் ,
காலஞ்சென்ற வீரகத்தி, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாசனி அவர்களின் பாசமிகு கணவரும் ,
வாசுகி , தர்சினி , விவர்ஜிதா , குமரவேல் , தாரணி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ,
இளைப்பாறிய சட்டத்தரணி சுந்தரலிங்கத்தின் அன்பு சகோதரரும்,
சாந்தகுமார், எட்ரியன் மற்றும் சர்வா சிவானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வருஷா , தரிணி, மிதுணன், தருணன் மற்றும் டானியெல் ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல்
கொழும்பு.8 , பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில்
27.05.2021 வியாழக்கிழமை காலை 8.30 முதல் பி.ப.2.00 மணிவரை மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு , பி.ப. 4.30 மணியளிவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இத் தகவலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.