யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியை வசிப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லநாயகி இராஜரட்ணம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்து ஆண்டுகள் மட்டும் அல்ல
எத்தனை ஆண்டுகள் போனாலும்
மீண்டும் மீண்டும் அம்மா அம்மா
என்றே மனம் தேடுகின்றதம்மா
உன் ஞாபகத்தில் என்றும் நாம்
வெதும்பி வெதும்பி அழுகின்றோம்
வேதனையில் தவிக்கின்றோம்
எம் குடும்பத்தின் ஒளிவிளக்காய்
ஒளிர்ந்தவளே!
இன்றுவரை இனியாரும் இல்லை
அம்மா! எமக்கு இப் புவியில்
உங்களை இழந்த துயர் நீக்க!!!
உன் நினைவுகள் எங்களை விட்டு மறையவில்லை
அன்றில்லை, இன்றில்லை என்றுமே!
எங்கள் உடலில் உயிர் உள்ள வரை உங்கள் நினைவுகள்
என்றும் அழியா பொக்கிஷம் அம்மா!
ஒம் சாந்தி! ஒம் சாந்தி! ஒம் சாந்தி!