Tribute in Light
அம்மா,
இவ் பூவுலகில் பிறந்த அனைவரிற்கும் வேத மந்திரம் "அம்மா" என்ற ஒற்றை வார்த்தை. யாராக இருப்பினும் அவர்கட்கு அவர்களின் தாய்க்கு நிகர் வேறுயாருமிலர். இருப்பினும் என தாய் எனக்கு மிகவும் சிறப்பானவர். சிறுவயது முதல் இறைவனடி சேரும் வரையான காலத்தில் எனக்கும் என் அம்மாவிற்குமான பந்தம் பல பரிமாணங்களை கொண்டது. ஓர் தாயாக, சகோதரியாக, தந்தையாக, தோழியாக, குருவாக, ஆலோசகராக சில சமயங்களில் தாதியாக என வாழ்க்கை காலத்தின் அனைத்து படிநிலையிலும் என்னோடிருந்து, எனது விருப்பங்களை தெரிந்து, அவற்றிற்கு இடையூறாக இல்லாது என் விருப்பிலுள்ள நன்மை தீமைகளை எடுத்து சொல்லி சரியான வழியில் என் விருப்பங்களை நான் பூர்த்தி செய்யவும் காரணமாயிருந்த என் தாயே என்னுடைய பலம். அம்மா நீங்கள் இவ்வுலக வாழ்வை முடித்து இறைவனடி சேர்ந்து ஈர் ஐந்து ஆண்டுகள் கடந்த போதும் உங்கள் சிரித்த முகம் இப்போதும் கண்முன்னே வந்து போகிறது. உங்கள் ஒவ்வோர் வார்த்தையும் அத்தனை அர்த்தங்களை சொல்கின்றது. நீங்கள் இல்லா இவ் கணப்பொழுதுகள் உங்கள் அருமையை எமக்கு புரிய வைக்கின்றன.
பிறவி பயனை முடித்து இறைசிவன் பாத கமலங்களை நாடி சென்ற தங்கள் ஆத்மா பிறவா பேரின்ப பெருவாழ்வு பெற்று வாழ இறைசிவனை பிராத்திக்கிறேன்.
ஓம் சாந்தி! சாந்த !! சாந்தி !!!
அம்மா உங்கள் நினைவுடன்,
அன்பு மகன்
விதுரன். மருமகள் ஷிமறி பேரன் சேரன்...