யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Selmஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு கணேசரத்தினம் பிரபாகரன் அவர்கள் 01-11-2021 திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணேசரத்தினம் மற்றும் இந்திராணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
காலஞ்சென்ற மௌனகுரு, கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேன்மொழி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கோபிநாத் மற்றும் மயூரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதர்சன்(தீபன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
சியான், இனியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கிருபாகரன்(லண்டன்), மனோகரன்(லண்டன்), வசீகரன்(லண்டன்), ஜீவாகரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
திரு.திருமதி லோகராஜா தம்பதிகளின் பாசமிகு சம்மந்தியும்,
காலஞ்சென்ற செல்வகுரு மற்றும் மதிவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.