இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார்.
காலமாகும் போது அவருக்கு 41 வயது ஆகும்.
லிங்கநாதன் - மல்லிகா ஆகியோரின் மூத்த மகனும் , சுபாசினியின் கணவரும் , அபியின் தந்தையும் ஆவார்.
இலங்கை திரைத்துறையில் மிளிர்ந்து விளங்கிய தமிழ் கலைஞரான அவர், பல கலைஞர்களுக்கு ஊக்கம் கொடுத்து அவர்களோடு பணியாற்றி இலங்கை திரைத்துறை வளர்ச்சியிலும் பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று (05) மாலை 3 மணி வரை மக்கள் அஞ்சலிக்காக, அன்னாரது பூதவுடல் இரத்தினபுரி பகுதியில் உள்ள இறக்குவானையில் அன்னாராது இல்லத்தில் வைக்கப்படும்.
அதனை தொடர்ந்து அன்னாரது பூதவுடல் இன்று 5ம் திகதி மாலை 5 மணிக்கு இறக்குவானை பொது விளையாட்டு மைதானத்தில் தகனம் செய்யப்படும்.