" இலக்குமி வாசா" கரணவாய் மத்தி,
யாழ்.கரவெட்டியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட
திருமதி. பொன்னம்பலம் தனபாக்கியவதி அவர்கள்
10.11.2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம்,மீனாட்சிப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம்(RP master) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை இராமலிங்கம் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்), மீனாட்சிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான இரகுநாதன், புஸ்பநாதன், குணபாக்கியவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வாசுகி, ரேணுகா( ஆசிரியை யா/மெதடிஸ் பெண் உயர்தர பாடசாலை) அன்புத் தாயாரும்,
Dr அஜந்தன், Dr வசீகரன் ( மாகாண பணிப்பாளர் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம்-வடக்கு மாகாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr உமேசன், செளமியா, ஆர்த்தி ஆகியோரின் அன்புப் பேத்தியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள்
11.11.2023 (சனிக்கிழமை) அன்று 11 மணியளவில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் இந்துமயானத்திற்கு தகனத்திற்காக எடுத்து செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.