WE REMEMBER
Birth
5 3 1955
Death
6 9 2025
Late Veerakrthi Thamilchelvam (AJeevan)
AJeevan - அஜீவன் - අජීවන්
< Back to profile
Write Tribute
Tribute 13 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
அன்பு அண்ணா ?, என் கணவர் உங்களுடன் தினமும் வாட்சப்பில் பேசும்போது, நானும் உங்களுடன் பலமுறை பேசியிருக்கிறேன். உங்கள் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துஇருக்கிறேன்?. உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் ??
Tribute in Light
Rest in peace Mr.Ajeevan. May the Lord protect you everywhere you are in your next journey.
Tribute in Light
அஞ்சலியும் ஆழ்ந்த அனுதாபங்களும் சதா பாஸ்கரன்
Tribute in Light
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இணைய பக்கத்தில் நண்பராக அறிமுகமானவர். நிலா முற்றம் மற்றும் முத்தமிழ் மன்றம் பக்கத்தில் நாங்கள் பேசத விடையமில்லை. போய் வா நண்பா!
Tribute in Light
மனம் வருந்துகின்றேன். முத்தமிழ் மன்ற பயணத்தில் முதன் முதலாக எனக்கு தொலைப்பேசி செய்து வழிகாட்டியவர் அஜீவன் சகோ. இறைவனடியில் ஆன்மா இளைப்பாற வேண்டிக்கொள்கின்றேன்.
Tribute in Light
One of the best buddy.... From 1984, relationship between me and Com.Prasad, well traveled ..
Tribute in Light
அஜீவன் பிரசாந்த் என அழைக்கப்படும் அஜீவன். சிங்கப்பூரில் தொலைக்காட்சி நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். தமிழ்ஈழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அதிகாரபூர ஒளிபரப்பான தமிழ் ஈழத்தின் குரல் வானொலியின் சிங்கள அறிவிப்பாளராக தொடங்குவதற்கு செயல் அதிபர் உமா மகேஸ்வரனின் அறிவுறுத்தலை ஏற்று என்னை சந்திக்க ஒரத்த நாடு வந்திருந்தார். நான் தெலைத்தொடர்பு வேலை சம்மந்தமாக அவ்விடம் இல்லாததால் இரண்டு நாட்கள் தங்கி இருந்து என்னை சந்தித்தார் அதை எப்பொழுதும் குறிப்பாக கூறுவர். மாணிக்கம் தாசன் முயற்சியில் நிக்குறவட்டியா தாக்குதலுக்கு சென்றிருந்தார் அதில் வாமதேவனின் அவசரத்தால் ஒரு நாள் முன்பாக முழுமையாக தாக்குதலை நடத்தாது இந்தியா வந்ததையும். வாம தேவனின் அடாவடித்தனங்களையும் அவர் பின்பு கூறிய உண்மைக்கு புறன்பாடான செய்திகளையும் வாமதேவன் கழகத் தோழர்களுக்கு செய்த அட்டூழியங்களையும் தலைமையை மதிக்காத தன்மைகளையும், எமது கழகம் ஏன் இப்படி ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டது இதற்கான சூத்திரதாரிகள் யார் என்பதையும். நாம் அடிக்கடி பேசிக்கொள்வோம். இன்னும் பல ஏனைய தோழர்களும் எழுதிக் கொள்ளட்டும்... நான் இறுதியாக தயாரித்த "Name of karma" திரைப்படத்தின் சிங்கள ஆமியின் சரியான உச்சரிப்புக்காக அவரின் குரல் ஒலித்தது, அடிக்கடி அவரின் கருத்துக்களை ஏற்க முடியாது பேஸ்புக் இணையதளம் முடக்கப்பட்டு வந்தது. தமிழிலும் சிங்களத்திலும் அழகாக கருத்துக்களை எழுதும் தன்மை கொண்ட ஒரு தோழர். சிங்களத்தில் வரும் பல கருத்துக்களை எமக்கு அறிய தந்து கொண்டு இருந்தவர். அவரின் நோயிலிருந்து விடுதலை பெற்றுள்ளார் ஆனால் எம்மை விட்டு பிரிந்தது ஏற்க முடியாமல் இருக்கிறது. அவரின் ஆத்மா சாந்தி அடைய இயற்கை வேண்டுகிறேன்.
Tribute in Light
அஜீவனுக்கு அஞ்சலி, நான் சுவிட்சர்லாந்து நாட்டில் வசித்த காலத்தில் தமிழ் ஏடு பத்திரிகை வெளியிட்ட நேரம் அறிமுகம் ஆன நண்பர்களில் அவரும் ஒருவர். பத்திரிகையின் உள்ளடக்கம் பிடித்து கொண்ட காரணத்தால் தானும் அதற்கு பங்களிப்பு செய்ய விரும்பினார். சினிமா துறையில் அவருக்கிருந்த ஆர்வம் காரணமாக அது தொடர்பான கட்டுரைகளை எழுதி வந்தார். பத்திரிகை ஆசிரியர் குழுவில் இணைந்து கொண்டார். சில மாதங்களின் பின்னர் ஏதோ சில காரணங்களால் தமிழ் ஏடு வில் இருந்து விலகிக் கொண்டாலும் என்னுடன் தொடர்ந்து நட்பு பேணி வந்தார். நான் நெதர்லாந்து வந்த பின்னரும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடினார். தான் தயாரித்த குறும் பட CD க்களை அனுப்பி வைத்தார். பேஸ்புக் வந்த காலத்தில் நண்பராக இணைந்து கொண்டார். 2002 ம் ஆண்டு அளவில் சுவிட்சர்லாந்து சென்ற நேரம் வந்து சந்தித்து பேசினார். அது தான் நான் அவரைப் பார்க்கும் கடைசி சந்தர்ப்பம் என்பதை அறிந்திருக்கவில்லை. அவர் காலமான செய்தி தந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. அவர் பற்றிய நினைவுகளை இங்கே சுருக்கமாக பதிவு செய்திருக்கிறேன். மேலும் விரிவாக எழுதுவது அவருக்கு நான் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.
Tribute in Light
ஆழ்ந்த கவலை. அஜுவன் எனது முகநூல் நண்பரும் கூட. எனது முகநூல் ஆரம்ப காலங்களில் 2020 -2022 களில் மிகுந்த உற்சாகமான, சுவாரசியமான, அதேவேளை கருத்தாழமிக்க பதிவுகள் இட்டு வந்தார். சிறீ லங்கா சினிமா துறைபற்றி நன்கு அறிந்தவர். அது பற்றிய பதிவுகள் அதிகம் பகிர்வார். அனைவரும் ஏற்றுக்கொள்வது பற்றி பாராட்டாது, சிறீலங்கா அரசியல் பற்றிய தனது கருத்துகளையும் இடையிடையே துணிந்து பகிர்வார். தனது அன்பு மகன் பாடசாலை செல்வது பற்றியும் பகிர்ந்தார். நாளடைவில் தனது நோய் பற்றி தெரியப்படுத்தினார். பின்பு அமைதியானார். இப்போது நல்லதொரு நண்பர் நிரந்தர அமைதியில் உறங்கிவிட்டார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தோழமைகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Tribute in Light
?️ Tribute to Ajeevan Anna ?️ அஜீவன் அண்ணாவை முதலில் 2008 ஆம் ஆண்டு முத்தமிழ் மன்றத்தின் வழியாக அறிமுகமானதாக நினைத்திருந்தேன். ஆனால், அவர் கூறியபடி, 1992–1994 காலப்பகுதியில் சுவிஸில் நான் தமிழ் ஏடு பத்திரிகையில் எடிட்டிங் பணியில் இருந்தபோது, அவர் என்னை ஏற்கனவே அறிந்திருந்தார். அஜீவன் அண்ணாவை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன். முதல் தடவையாக Olten அருகிலிருந்த உணவகத்தில் மதிய உணவு நேரத்தில் நீண்ட நேரம் பேசினோம். அந்தச் சந்திப்பை பேஸ்புக்கிலும் பகிர்ந்திருந்தேன். பின்னர், அவரது மகன் @⁨Niroshan⁩ சுவிஸ் வந்திருந்த பொழுது நிரோஷனோடும், சில சிங்கள நண்பர்களோடும் எங்கள் உணவகத்துக்கு வந்து உணவருந்தியதும் நினைவில் நிற்கிறது. எங்கள் குடும்ப நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார்; அந்த நிகழ்வுகளை அவர் தனது பேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். Hegas Catering நிறுவனம் Olten நகரில் ஈவென்ஸ் நடத்தும் பொழுது வேலைக்குத் தேவையான நபர்களை அறிமுகம் செய்து அனுப்பியதும், நேரில் வந்து உணவருந்திச் சென்றதும் என் நினைவில் இருக்கிறது. அவருக்கு எப்போதும் எங்கள் தமிழ் உணவுகள் மீது அன்பு. “அந்தப் பக்கம் வந்தால் உணவு பார்சல் கொடுக்க மறக்காதே” என்று எப்போதும் கூறுவார். நானும் அதை மறந்ததில்லை. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவை எப்போதும் தனிப்பட்ட நட்புக்குள் வரவில்லை. எங்கள் உரையாடல்களில் அரசியல் எப்போதும் இடம் பெறவில்லை. அவரை பலரும் பல்துறை வல்லுநராகவே அறிந்திருக்கிறார்கள். ஆனால், நான் அவரை ஒரு தகப்பனாக சமூகத்தின் அவலங்களைச் சுட்டிக்காட்டி, தன்னுடைய மனக்கவலைகளை வெளிப்படுத்தியவராகவே நினைவில் கொண்டிருக்கிறேன். இறுதியாக சந்தித்தபோது, இலங்கையில் பெற்றோரால் கைவிடப்படும் தமிழ் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லம் ஒன்றை அமைக்கலாமா என்று சமூக அக்கறையோடு பேசினார். 2020 கொரோனா லாக்டவுன் காலத்தில் ஒரு பதிவில் கருத்து வேறுபாட்டுக்குப் பிறகு எங்கள் தொடர்பு நிறுத்தப்பட்டது. வாழும் காலத்தில் சொல்லத் தவறிய வாழ்த்துகளும் நன்றிகளும், இன்று நினைவுகளாகவே மனதைத் தொட்டுச் செல்கின்றன. அஜீவன் அண்ணா வெளிப்படையாகச் சொல்லப்படாத பல வழிகளில் பலருக்கும் உதவியாக இருந்தார். அவரால் பயனடைந்தோர் தங்கள் நினைவுகளை பகிர்ந்தால், அதுவே அவருக்கான சிறந்த அஞ்சலியாக இருக்கும். ?
Tribute in Light
பல வருடங்கள் என்னுடன் நட்பாக இருந்தவர் olten ரயில் நிலையத்தில் caffe அருந்தி கொண்டே பேசுவோம் நான் கடவுள் நம்பிக்கை குறித்து பேசும் போது கேட்பார் பதில் பேச மாட்டார் இவ்வளவு விரைவாக நம்மை விட்டு பிரிவார் என எதிர்பார்க்கவில்லை என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்
Tribute in Light
எனது அருமை உடன் பிறவா சகோதர நண்பர் அஜீவனுடன் சேர்ந்து பல வலைத்திட்டங்களை உருவாக்கினேன். அவற்றில் RIPhall.com – Obituaries & Lifetime Online Memorial Hall அவருக்கென அர்ப்பணிக்கப்பட்ட முக்கியமானது. அவரின் விருப்பப்படி, இந்த சேவை இலவசமாகவோ அல்லது பராமரிப்பு செலவுக்கேற்ற குறைந்த கட்டணத்தில் தொடர்ந்தும் செயல்படும். இது எப்போதும் அவரின் நினைவாக நிலைத்திருக்கும். ? Together with my dear friend Ajeevan, I had the privilege of creating several web projects. Among them, RIPhall.com – Obituaries & Lifetime Online Memorial Hall stands as a heartfelt dedication to him. As per his wish, this service will continue—either free of charge or at a minimal cost, solely to cover its upkeep. It will remain forever as a living tribute to his memory. ?
Tribute in Light
25 வருடங்களாக தொடர்ந்த அன்பு நட்பு — ஒரே குடும்பத்தில் பிறக்காதபோதும், பூர்வஜென்ம பந்தமாகவே இருந்தது எனக்குத் தோன்றுகிறது. அவரின் பிறப்பின் போது விதிக்கப்பட்ட அந்த இறுதி தருணம் தவிர்க்க முடியாத ஒன்று. எனினும், இன்னொரு நூற்றாண்டில் அடுத்த பிறவியில் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு அமையும் என்று நம்புகிறேன். இம்முறை, அவரின் ஆத்மா சாந்தியடைய, அவரின் விருப்பக் கடவுள் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.? A cherished friendship of 25 years — though not born into the same family, it has always felt like a bond from a previous birth. That final moment of his life, destined at the time of his birth, was truly inevitable. Yet, I believe that in another century, in another lifetime, I will have the blessing of meeting him again. For now, I pray that his soul attains eternal peace, with the grace of his chosen deity.?