🕊️ ENGLISH
Dr Navaratnam Navaneetharajah (Navam) Born on 27 January 1934 in Manipay, Sri Lanka Passed away on 19 April 2026 in London, United Kingdom
(Retired Medical Practitioner and Obstetrician)
He was educated at St Joseph’s College, Colombo, and later at the Colombo Medical College, qualifying in 1962. He served in Kalmunai, Deltota, Kegalle, and later in Liverpool, England.
He was the beloved son of Chinappa Navaratnam and Katpaham Chelliah of Kurrukkadu, Urumpirai. He was predeceased by his brother Thavaneetharajah, a retired teacher and Royal College cricketer.
He is survived by his wife Dr Beatrice Mary Jessie (née Stanislaus); his children Sanjayan and Dr Prithiva Navaneetharajah; his adopted daughter Manike; and his grandchildren Shove, Santosh, Alisa, and Finn.
Navam will be remembered for his dedication to his profession, his gentle nature, and the lasting impact he made on his patients, family, and friends. A keen cricketer and later a golfer, he served as captain of Lee Park Golf Club in Liverpool and was a loyal member of the Royal Colombo Golf Club (RCGC).
The funeral will take place at 1.30 pm BST on 3 May 2026 at South London Crematorium, Rowan Road, London SW16 5JG, following a religious service held at home.
We warmly invite all family, friends, and loved ones to join us in honouring and celebrating Navam’s remarkable life and enduring legacy.
For further information regarding the final rites, or to express your condolences, please contact us at the email address given below.
[email protected]
🕊️ TAMIL
டாக்டர் நவரத்தினம் நவநீதராஜா (நவம்)
பிறப்பு: 27 ஜனவரி 1934, மணிப்பாய், இலங்கை
இறப்பு: 19 ஏப்ரல் 2026, லண்டன், ஐக்கிய இராச்சியம்
(ஓய்வு பெற்ற மருத்துவர் மற்றும் மகப்பேறு நிபுணர்)
"நவம்", கொழும்பு செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் பின்னர் கொழும்பு மருத்துவக் கல்லூரியிலும் கல்வி கற்று, 1962 ஆம் ஆண்டு மருத்துவராக தகுதி பெற்றார். கல்முனை, டெல்டோட்டா, கேகாலை மற்றும் பின்னர் லிவர்பூல் (இங்கிலாந்து) ஆகிய இடங்களில் மருத்துவப் பணியில் ஈடுபட்டார்.
"நவம்", உரும்பிராய் குருக்காடு'வை சேர்ந்த சின்னப்பா நவரத்தினம் மற்றும் கற்பகம் செல்லையா அவர்களின் அன்புப் புதல்வர் ஆவார். ராயல் கல்லூரி கிரிக்கெட் வீரரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான அமரர் தவநீதராஜா அவர்களின் அன்புத்தம்பியும் ஆவார்.
"நவம்", மனைவி டாக்டர் பீட்ரிஸ் மேரி ஜெஸ்ஸி (ஸ்டானிஸ்லாஸ்), குழந்தைகள் சஞ்சயன், டாக்டர் பிரிதிவா நவநீதராஜா, தத்தெடுத்த மகள் மாணிக்கே மற்றும் பேரப் பிள்ளைகள் ஷோவ், சன்தோஷ், அலிசா, ஃபின் ஆகியோரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
தன் தொழிலில் காட்டிய அர்ப்பணிப்பு, மென்மையான பண்பு, நோயாளிகள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வாழ்வில் ஏற்படுத்திய நிலையான தாக்கம் ஆகியவற்றிற்காக "நவம்" என்றும் நினைவுகூரப்படுவார். ஆர்வமுள்ள கிரிக்கெட் வீரராகவும் பின்னர் கால்ப் விளையாட்டாளராகவும் விளங்கிய அவர், லிவர்பூல் லீ பார்க் கால்ப் கிளப்பில் கேப்டனாகவும், ராயல் கொழும்பு கால்ப் கிளப்பின் விசுவாசமான உறுப்பினராகவும் இருந்தார்.
'மே' மாதம் 3ம் திகதி (2026) அன்று பிற்பகல் 1.30 BST மணிக்கு South London Crematorium, Rowan Road, London SW16 5JG இல் இறுதிச்சடங்கு நடைபெறும். இதற்கு முன் வீட்டில் மதச்சடங்கு நடைபெறும்.
"நவம்" அவர்களின் சிறப்பான வாழ்க்கையை கௌரவிக்கும் இந்த நிகழ்வில், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அன்புக்குரிய அனைவரையும் கலந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.
இறுதிச் சடங்குகள் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு அல்லது உங்கள் அனுதாபங்களைத் தெரிவிக்க, கீழே வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியில் குடும்பத்தினரை தொடர்பு கொள்ளுங்கள்.
[email protected]
🕊️ SINHALA
අභාවප්රාප්ත වීම - වෛද්ය නවරත්නම් නවනීටරාජා (නවම්)
මනිපායි හි උපත ලබා ලන්ඩනයේ පදිංචිව සිටි, ප්රසව හා නාරිවේද විශේෂඥ වෛද්ය නවරත්නම් නවනීටරාජා (නවම්) මහතා 2026 අප්රේල් 19 වන දින අභාවප්රාප්ත වූ බව කණගාටුවෙන් දැනුම් දෙමු.
කොළඹ ශාන්ත ජෝසප් විද්යාලයෙන් සහ කොළඹ වෛද්ය පීඨයෙන් අධ්යාපනය ලැබූ ඔහු, 1962 වසරේදී වෛද්යවරයකු ලෙස සේවයට එක්විය. ලංකාවේ කල්මුණේ, දෙල්තොට සහ කෑගල්ල යන ප්රදේශවල සේවය කළ ඔහු, පසුව එංගලන්තයේ ලිවර්පූල් නගරයේ ද වෛද්යවරයකු ලෙස කටයුතු කළේය.
ඔහු වින්නප්පා නවරත්නම් සහ කට්පහම් වෙල්ලියා යුවළගේ ආදරණීය පුත්රයා වන අතර, කොළඹ රාජකීය විද්යාලයේ හිටපු ක්රිකට් ක්රීඩකයෙකු සහ ගුරුවරයෙකු වූ නවනීටරාජා මහතාගේ සොහොයුරා වේ.
ස්ටැනිස්ලෝස් පවුලේ වෛද්ය බියට්රිස් මේරි ජෙසීගේ ආදරණීය ස්වාමිපුරුෂයා වූ ඔහු, සන්තෝෂ්, වෛද්ය ප්රිතිවා සහ මැණිකේ යන දරුවන්ගේ පියාණන් ය. ඔහු ජෝසප්, සන්තෝෂ්, ඇලිසා සහ ලින් යන අයගේ ආදරණීය සීයා ද වේ.
ක්රිකට් සහ ගොල්ෆ් ක්රීඩාවට බෙහෙවින් ඇලුම් කළ නවම් මහතා, ලිවර්පූල් Lee Park ගොල්ෆ් සමාජයේ නායකයෙකු ලෙසත්, Royal Colombo ගොල්ෆ් සමාජයේ සාමාජිකයෙකු ලෙසත් කටයුතු කළේය. ඔහුගේ නිහතමානී ගතිගුණ සහ වෛද්ය වෘත්තිය වෙනුවෙන් කළ කැපවීම නිසා ඔහු සැමගේ ගෞරවයට හා ආදරයට පාත්ර විය.
අවසාන කටයුතු 2026 මැයි මස 03 වන දින පස්වරු 1.30 ට (BST) ලන්ඩනයේ South London Crematorium (Rowan Road, London SW16 5JG) හිදී සිදු කෙරේ. ඊට පෙර නිවසේදී ආගමික වතාවත් පැවැත්වෙනු ඇත. නවම් මහතාගේ සොඳුරු මතකයන් සැමරීමට සහ අවසන් ගෞරව දැක්වීමට පැමිණෙන ලෙස සියලුම හිතමිතුරන්ට ආරාධනා කර සිටිමු.
අවසාන කටයුතු පිළිබඳ වැඩිදුර තොරතුරු සඳහා හෝ ඔබගේ ශෝක සංවේගය පළ කිරීමට පහත සඳහන් විද්යුත් තැපැල් ලිපිනයට අප හා සම්බන්ධ වන්න.
[email protected]