யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் நோர்வே ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்டிருந்த
அமரர் நிரஞ்சன் பிரதாப் நிதியானந்தன் அவர்கள், 06.03.2026 அன்று Oslo, Norway இல் இறைபதம் அடைந்தார் என்பதை மிகுந்த துயரத்துடன் அறிவிக்கிறோம்.
அன்னார், நவாலியூர் சேர்ந்த காலஞ்சென்ற திரு. நிதியானந்தன் மற்றும் புலோலியூர் சேர்ந்த காலஞ்சென்ற திருமதி. லீலாவதி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும்,
காலஞ்சென்ற நிரஞ்சனா மற்றும் நிர்மலேன் (பிரகாஷ்) அவர்களின் அன்பு சகோதரனுமாவார்.
அமரர் நிரஞ்சன் (பிரதாப்) நிதியானந்தன் அவர்கள் 1958 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 26 ஆம் திகதி, தந்தையார் பொறியியலாளராக பணியாற்றியிருந்த காலத்தில் பங்களாதேஷில் பிறந்தார்.
அவர் St. Benedict’s College, Colombo இன் பழைய மாணவராகவும் விளங்கினார்.
அங்கு கல்வி கற்ற காலத்தில் சர்வதேச தரம் வாய்ந்த திறமையுள்ள கிரிக்கெட் வீரராகவும் திகழ்ந்தார்.
பின்னர் 1984 ஆம் ஆண்டு Oslo பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்று நோர்வே நாட்டிற்கு வந்து அங்கு வாழ்ந்து வந்தார்.
நோர்வேயில் வாழ்ந்த காலத்தில் அவர் வயோதிபர்களுக்கான கணினி கல்வியை கற்பிக்கும் ஆசிரியராகவும், பிள்ளைகள் விரும்பும் ஆங்கில ஆசிரியராகவும் பணியாற்றி பலரின் அன்பையும் மரியாதையையும் பெற்றவர் ஆவார்.
அவர் நளினி மற்றும் மரியா ஆகியோரின் அன்பு பெரியப்பாவுமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். 🙏